Skip to main content

நாட்டின் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன

Nov 30, 2020 232 views Posted By : YarlSri TV
Image

நாட்டின் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன 

கொழும்பு மாவட்டத்தில் மூன்று பொலிஸ் அதிகார பிரதேசங்களும் கம்பஹா மாவட்டத்தில் இரண்டு பொலிஸ் அதிகார பிரதேசங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.



இதற்கமைய இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத்தளபதி லெஃப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



இதன்படி கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, புறக்கோட்டை, கொழும்பு கரையோரம் ஆகிய பொலிஸ் அதிகார பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.



எனினும் முகத்துவாரம், புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, கிரேண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித் தெரு, டேம் வீதி, வாழைத் தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொடை மற்றும் மருதானை ஆகிய காவல்துறை அதிகார பிரதேசங்களும் கொம்பனித் தெரு காவல்துறை அதிகார பிரதேசத்திற்குட்பட்ட, வேகந்த கிராம சேவகர் பிரவும் பொரளை பொலிஸ் அதிகார பிரதேசத்திற்கு உட்பட்ட வனாத்த முல்ல கிராம சேவகர் பிரிவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



இதேநேரம், வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன தொடர்குடியிருப்பு மற்றும் சாலமுல்ல, விஜயபுர ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



இதுதவிர, மட்டக்குளி பொலிஸ் அதிகார பிரதேசத்துக்கு உட்பட்ட ரன்திய உயன வீடமைப்பு திட்டம் மற்றும் ஃபேர்சன் வீதியின் தெற்கு பிரதேசம் என்பனவும் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



இதேநேரம், புறக்கோட்டை பகுதியில் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் பழைய மெனிங் சந்தையிலும் 4ஆம் மற்றும் 5ஆம் குறுக்கு வீதிகளிலும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் ராகமை, நீர்கொழும்பு என்பனவும் இன்று காலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.



எனினும் கம்பஹா மாவட்டத்தின் வத்தளை, பேலியகொடை மற்றும் களனி ஆகிய பொலிஸ் அதிகார பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



அத்துடன் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை