Skip to main content

இந்தியாவுக்கு மஞ்சளை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!

Nov 29, 2020 275 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவுக்கு மஞ்சளை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை! 

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மஞ்சள் அடங்கிய கொள்கலன்களை மீள இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய தீர்மானித்துள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்க பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.



இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சுங்க திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டு, களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 62 மஞ்சள் அடங்கிய கொள்கலன்களை, மீள இந்தியாவுக்கு அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளோம்.



இந்தியாவிலிமிருந்து அபராதத் தொகையை அறவிட்டு, அதனை இந்தியாவுக்கே மீள் ஏற்றுமதி செய்யவுள்ளோம்.



மேலும், கைப்பற்றப்பட்டுள்ள கொள்கலன்களில் 1 மில்லியன் கிலோ கிராம் மஞ்சள் காணப்படுகின்றது.



அத்துடன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்டு, அரசுடமையாக்கப்பட்டுள்ள 30தொன் மஞ்சளில் 10தொன், ஆயுர்வேத உற்பத்தி கூட்டுதாபனத்தின் கோரிக்கைக்கமைய, நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை