Skip to main content

விவசாயிக்கு நஷ்டம் ஏற்பட்டதால் 700 கிலோ கொத்தமல்லியை விஜய் தலைமை இளைஞர் மன்றத்தினர் இலவசமாக விநியோகம்!

Nov 28, 2020 264 views Posted By : YarlSri TV
Image

விவசாயிக்கு நஷ்டம் ஏற்பட்டதால் 700 கிலோ கொத்தமல்லியை விஜய் தலைமை இளைஞர் மன்றத்தினர் இலவசமாக விநியோகம்! 

 



விவசாயிக்கு நஷ்டம் ஏற்பட்டதால் 700 கிலோ கொத்தமல்லியை விஜய் தலைமை இளைஞர் மன்றத்தினர் இலவசமாக விநியோகம்!



தேனி மாவட்டத்தில் உள்ள அம்மாச்சியாபுரம், கொடுவிலார்பட்டி குன்னூர் , திருமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கொத்தமல்லி தழைகள் ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்து வருகிறார்கள் விவசாயிகள் . இந்த கொத்தமல்லி தழைகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிலோ ரூபாய் 40க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.



ஆனால் கடந்த ஒருமாத காலமாக கொத்தமல்லி தழைகள் கிலோ ரூ. 5க்கு விற்பனை ஆகி வருகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கொத்தமல்லி தழைகளை விரக்தியில் வைகை ஆற்றில் கொட்டி தங்கள் எதிர்ப்பையும், வேதனையையும் தெரிவித்தார்.



 இந்த சம்பவத்தை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், இதனை அறிந்த விஜய் இளைஞர் அணி தலைமை மன்றத்தினர் விவசாயியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளப்பட்டி கிராமத்துக்கு நேரடியாக சென்று போக்குவரத்து செலவு அறுவடை உள்ளிட்ட செலவுகளை ஏற்று சந்தை விலைக்கே கொத்தமல்லித்தழையினை வாங்கி கொண்டனர். அத்துடன் அதை தேனி உழவர் சந்தையில் சுமார் 700 கிலோ வரை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கினர் . இதனால் அங்கு மக்கள் திரண்டு இலவச கொத்தமல்லியை வாங்கி சென்றனர். இதை கண்ட விவசாயிகள் விஜய் மக்கள் மன்றத்தினரை வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின் போது யாரும் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை, முக கவசம் அணியவில்லை என்பது கூடுதல் தகவல்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை