Skip to main content

மெக்ஸிகோவில் எட்டு இலட்சத்து மூவாயிரத்து 581பேர் குணமடைந்துள்ளனர்.!

Nov 28, 2020 261 views Posted By : YarlSri TV
Image

மெக்ஸிகோவில் எட்டு இலட்சத்து மூவாயிரத்து 581பேர் குணமடைந்துள்ளனர்.! 

 



அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் எட்டு இலட்சத்து மூவாயிரத்து 581பேர் குணமடைந்துள்ளனர்.



உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் மெக்ஸிகோவில், இதுவரை பத்து இலட்சத்து 78ஆயிரத்து 594பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் மொத்தமாக, ஒரு இலட்சத்து நான்காயிரத்து 242பேர் உயிரிழந்துள்ளனர்.



கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் எட்டாயிரத்து 107பேர் பாதிக்கப்பட்டதோடு, 645பேர் உயிரிழந்துள்ளனர்.



தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 70ஆயிரத்து 771பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 335பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை