Skip to main content

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்கவிருந்த மாணவி ஒருவருக்கு சான்றிதழில் பிழை!

Nov 19, 2020 275 views Posted By : YarlSri TV
Image

மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்கவிருந்த மாணவி ஒருவருக்கு சான்றிதழில் பிழை! 

 மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்கவிருந்த மாணவி ஒருவருக்கு சான்றிதழில் பிழை இருந்த நிலையில், ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரனின் முயற்சியால் சில மணிநேரங்களில் அவருக்கு புதிய சான்றிதழ் வழங்கப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த ராயபாளையம்புதூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி மகள் கோபிகா. பிளஸ் 2 முடித்துள்ள கோபிகா,சென்னையில் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க தனது ஆவணங்களை சரி பார்த்துள்ளார்.



அப்போது, பிறப்பிட சான்றிதழில் தனது பெயரில் எழுத்துப்பிழைஇருந்ததை கடைசி நேரத்தில் கண்டுபிடித்தார்.இ-சேவை மையம் மூலம் புதிதாக பிறப்பிட சான்றிதழ் விண்ணப்பித்து காத்திருந்தார்.



வழக்கமாக சான்றிதழ்கிடைக்க குறைந்தபட்சம் 10 நாட்கள் வரை ஆகும் நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வந்த அவர், இதுகுறித்து தனது தோழி ஒருவரிடம்பேசியுள்ளார். அப்போது அந்த தோழியின் தந்தை அறிவுறுத்தலின் பேரில், இதுகுறித்து, ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரனிடம் உதவிகேட்டு மின்னஞ்சல் அனுப்பினார். இதனை கண்ட உதயசந்திரன், உடனடியாக ஈரோடு மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு, மாணவி கோபிகாவிற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், மாணவியின் உதவிக்கு தனது நண்பர் ஒருவரை அனுப்பிவைத்து, அவ்வப்போது விவரங்களையும் கேட்டறிந்து வந்தார்.



இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் அறிவுறுத்தலின் பேரில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, சில மணி நேரங்களில் மாணவி கோபிகாவிற்கு புதிதாக பிறப்பிடச்சான்றிதழ் வழங்கி உதவினர். ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை