Skip to main content

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் முரசொலி மூலப்பத்திர விவகாரம்!

Nov 15, 2020 217 views Posted By : YarlSri TV
Image

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் முரசொலி மூலப்பத்திர விவகாரம்! 

பஞ்சமி நில விவகாரம் குறித்து பேசிய அசுரன் சினிமாவை வெகுவாக பாராட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, உங்க முரசொலி பத்திரிகை அலுவலகத்தின் நிலமே பஞ்சமி நிலம்தான். பஞ்சமி நிலத்தை அபகரித்துதான் முரசொலி அறக்கட்டளை அமைத்திருக்கிறது திமுக என்று சொல்லி அதிர வைத்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.



வன்னியர் கல்வி அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வந்ததால்தான் முரசொலி விவகாரத்தில் அதிரடியை கிளப்பினார் ராமதாஸ்.



ஆனால், இந்த குற்றச்சாட்டினை மறுத்த ஸ்டாலின், முரசொலி நிலத்திற்கு பட்டா இருக்குது என்றார். அப்படி என்றால் மூலப்பத்திரம் எங்கே? என்று கேட்டார் ராமதாஸ்.இதில் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார் ஸ்டாலின். மூலப்பத்திரத்தை காட்ட முடியாததால், முரசொலி நிலம் வாடகையில் இயங்குகிறது என்று பல்டி அடித்தார் ஸ்டாலின். அப்போதும் ராமதாஸ் விடவில்லை. அப்படியானால், அந்த வாடகை ஒப்பந்த பத்திரத்தை காட்டுங்கள், வாடகை கட்டின ரசீது எங்கே? என்று கேட்டார். ஸ்டாலின் இதுவரையிலும் காட்டவில்லை.



இந்நிலையில், பஞ்சமி நிலத்தினை அபகரித்த முரசொலி மூல பத்திர நகலை கண்டுபிடித்து கொடுத்தால் 5 லட்சம் பரிசு என்ற போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்படுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.



இந்த போஸ்டர்களை ஒட்டியது ஆதித்தமிழர் மக்கள் கட்சி என்று தெரியவந்திருக்கிறது.



இந்த போஸ்டர் குறித்து ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாணசுந்தரம், ‘’48 ஆண்டுகளுக்கு முன்பாக தனது ஆட்சிக்காலத்தில் மோசடியான உத்தரவு மூலம் அபகரித்த நிலம்தான் முரசொலில் நிலம். பிரிட்டிஷ் ஆட்சியில் விக்டோரியா மகாராணி, சென்னையில் தாக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு வழங்கிய பஞ்சமி நிலம்தான் முரசொலி நிலம். இது திமுகவினருக்கு நன்றாகவெ தெரியும். ஸ்டாலின் நேர்மையானவாக இருந்தால் அந்த பஞ்சமி நிலத்தை ஒப்படைத்திருப்பார். ஆனால் அதைச்செய்யாமல், அந்த பஞ்சமி நிலத்தை அபகரிக்க மேலும் முயன்று வருகிறார்’’என்று தெரிவித்துள்ளார்.



அவர் மேலும், ‘’பஞ்சமி நிலத்தை மீண்டும் பட்டியலித்தவர்களிடம் ஒப்படைக்கும் வரை ஆதித்தமிழர் மக்கள் கட்சி தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும். அதனால்தான் முரசொலி நிலம் பஞ்சமி நிலம் என்பதற்கான மூலப்பத்திரத்தினை கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் பரிசு என அறிவித்திருக்கிறோம்’’என்று தெரிவித்திருக்கிறார்.



முரசொலி மூலப்பத்திர விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருவதால் அதிர்ந்து போயிருக்கிறது திமுக.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை