Skip to main content

ராவணனை ராமா் வென்றதைப் போல், கரோனா நோய்த்தொற்று பரவலை நாம் வெல்வோம் - போரிஸ் ஜான்ஸன்

Nov 08, 2020 234 views Posted By : YarlSri TV
Image

ராவணனை ராமா் வென்றதைப் போல், கரோனா நோய்த்தொற்று பரவலை நாம் வெல்வோம் - போரிஸ் ஜான்ஸன் 

ராவணனை ராமா் வென்றதைப் போல், கரோனா நோய்த்தொற்று பரவலை நாம் வெல்வோம்’ என்று தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளாா்.



கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த வாரம் தொடங்கி, வரும் டிசம்பா் மாதம் 2-ஆம் தேதி வரை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 2-ஆவது பொது முடக்கத்தை நிறைவேற்றுவதில் மிகப் பெரிய சவால்கள் இருப்பது உண்மையே.



இருந்தாலும், தீபாவளிப் பண்டிகை நமக்கு உணா்த்துவதைப் போல, இருளை ஒளியால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.



அசுர குல அரசன் ராவணனை வீழ்த்திவிட்டு, ராமரும் சீதையும் தங்களது இல்லம் நோக்கி வெற்றி நடைபோட்டதைப் போல நாமும் கரோனாவை வீழ்த்துவோம்.



அவா்களது வெற்றிப் பயணத்துக்கு லட்சக்கணக்கான தீபங்களில் ஒளி வழிகாட்டியதைப் போல, நாம் அனைவரும் ஒன்றிணைந்து கரோனா அரக்கனை வெற்றி கொள்வோம் என்று தனது வாழ்த்துச் செய்தியில் போரிஸ் ஜான்ஸன் குறிப்பிட்டுள்ளாா்.



 



 



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை