Skip to main content

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று(06) இடம்பெற்றுள்ளது!

Nov 07, 2020 295 views Posted By : YarlSri TV
Image

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று(06) இடம்பெற்றுள்ளது! 

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று(06) இடம்பெற்றுள்ளது.



கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அனைத்து மாகாண, வலைய கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.



இதன்போது பாடசாலைகளில் 50 சதவீத மாணவர்களை பாடசாலைகளுக்கு வரவழைத்து நேரமாற்றம் இன்றி, சமுக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கல்வி செயற்பாடுகளை நடத்துவது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.



எனினும் இதுதொடர்பான இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.



அரச பாடசாலைகளில் நவம்பர் 9ம் திகதி முதல் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், 2ம் அலை கொரோனா பரவல் காரணமாக 2 வாரங்களுக்கு இந்த நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை