Skip to main content

அமெரிக்க அதிபர் தேர்தலில் நியூயார்க் மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி !

Nov 04, 2020 248 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்க அதிபர் தேர்தலில் நியூயார்க் மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி ! 

 தற்போதைய நிலவரப்படி 129 வாக்குகளை பெற்று ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார்.



 அமெரிக்காவில் மொத்தமாக உள்ள 50 மாநிலங்களிலும் சேர்த்து 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க அதிபர் பதவியில் அமர முடியும். அப்படி இருக்கும் நிலையில் இதுவரை ஜோ பைடன் 129 வாக்குகளும், டிரம்ப் 94 வாக்குகளும் பெற்று முன்னிலையில் உள்ளனர். இருவருக்கும் இடையே சொற்ப வாக்குகள் வித்தியாசம் மட்டுமே உள்ளன.



நியூயார்க்கில் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். அத்துடன் அவர் வெர்மாண்ட், மாசசூசட்ஸ், நியூஜெர்சி,கனக்டிகட்,டெலவர் மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் இண்டியானா, டென்னஸி, மேற்குவெர்ஜினியா மாநிலங்களில் ட்ரம்ப் வெற்றிபெற்றுள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை