Skip to main content

நவம்பர் 3 முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது!

Oct 31, 2020 294 views Posted By : YarlSri TV
Image

நவம்பர் 3 முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது! 

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் அறிக்கை குழுவை அமைத்து தி.மு.க தலைமை அறிவித்தது. தேர்தல் அறிக்கை குழுவில் டி. ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ,கனிமொழி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் டி.கே.எஸ் இளங்கோவன், பேராசிரியர் அ. ராமசாமி ஆகியோரும் தேர்தல் அறிக்கைக் தயாரிப்புக் குழுவில் உள்ளனர்.



இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. நவம்பர் 3ஆம் தேதி கோவை, நீலகிரி மாவட்டத்திலும், நவம்பர் 4ஆம் தேதி திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.



நவம்பர் 5ஆம் தேதி சேலம், நாமக்கல் மாவட்டத்திலும், நவம்பர் 6ஆம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் நடைபெறவுள்ளது. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து டி.ஆர்.பாலு தலைமையில் குழுவிடம் மனு அளிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை