Skip to main content

ஆட்சியை இழக்க நேரிடும் – போராட்டத்தில் எச்சரித்த ரயில்வே தொழிலாளர்கள்!

Oct 20, 2020 206 views Posted By : YarlSri TV
Image

ஆட்சியை இழக்க நேரிடும் – போராட்டத்தில் எச்சரித்த ரயில்வே தொழிலாளர்கள்! 

ரயில்வே தொழிலாளர்களுக்கான போனஸ் வழங்கமறுக்கும் மத்திய அரசையும், ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து எஸ்ஆர்எம்யு ரயில்வே தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசு தன்னுடைய ஆட்சியை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.



தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் மற்றும் அகில இந்திய ரயில்வே பெடரேஷன் சார்பில் அதன் தலைவர் கண்ணையா அறிவுறுத்தலின் பேரில் நாடு தழுவிய போனஸ் தினமாக கடைபிடிக்கப்பட்ட மூன்று தினங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன்படி திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்கம் சார்பில் ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் பங்கேற்று மத்திய அரசையும், ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷமிட்டனர்.



1974ல் அனைவரும் எஸ்ஆர்எம்யூ தலைமையேற்று நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பல்வேறு தொழிலாளர்களின் தியாகத்தால் பெற்ற போனஸ் தொகையை மத்திய அரசு நிறுத்த முயற்சிப்பதாகவும், ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து ரயில்வே அமைச்சகத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர் போராட்டத்திற்கு அடிபணியாவிட்டால் பெரிய போராட்டத்தை கையிலெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.



மேலும் மத்திய அரசின் ரயில்வே தனியார்மயம் மற்றும் ரயில் நிலையங்கள் தனியார் மயம், ஆட்குறைப்பு போன்றவற்றை மத்திய அரசு செய்துவருவது பொது மக்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இதன்மூலம் மத்திய அரசு தன்னுடைய ஆட்சியை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை