Skip to main content

நகைக்கடையில் ரூ.30 லட்சம் நகைகள் திருட்டு – ஊழியர் கைது

Oct 18, 2020 266 views Posted By : YarlSri TV
Image

நகைக்கடையில் ரூ.30 லட்சம் நகைகள் திருட்டு – ஊழியர் கைது 

ஊட்டியில் இயங்கி வரும் பிரபல நகைக்கடையில் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைளை திருடிவிட்டு, போலி நகைகளை வைத்த ஊழியரை போலீசார் கைதுசெய்தனர். ஊட்டியில் இயங்கி வரும் செம்மண்ணுர் நகைக்கடையில் சிறப்பு திட்டதின் கீழ், பொதுமக்கள் தங்களது பழைய நகையை கொடுத்துவிட்டு புதிய நகையை வாங்கி சென்றனர். இந்நிலையில், மேலாளர் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வின்போது 400 கிராம் எடை கொண்ட நகைகள்.



கவரிங் நகையாக இருந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்ததில், அங்கு 6 வருடங்களாக பணிபுரிந்து வந்த தூத்துக்குடியை சேர்ந்த கணபதி (29) என்ற ஊழியர் 400 கிராம் தங்க நகையை எடுத்துக்கொண்டு, கவரிங் நகையை வைத்தது தெரியவந்தது. இதையடுத்து உதகை மத்திய காவல் நிலையத்தில் மேலாளர் புகார் அளித்தார். புகாரை அடுத்து உதகை எஸ்.பி சசிமோகன் உத்தரவின் பெயரில் காவல்



ஆய்வாளர் விநாயகம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நகைக்கடை ஊழியர் கணபதி திடீரென தலைமறைவாகினார். அவரை தீவிரமாக தேடி வந்த தனிப்படை போலீசார், தூத்துகுடியில் பதுங்கியிருந்த கணபதியை கைதுசெய்து நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை