Skip to main content

கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனா என தகவல் வெளியான நிலையில் வியாபாரிகள் சங்கம் தரப்பில் விளக்கமளித்துள்ளது!

Oct 13, 2020 263 views Posted By : YarlSri TV
Image

கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனா என தகவல் வெளியான நிலையில் வியாபாரிகள் சங்கம் தரப்பில் விளக்கமளித்துள்ளது! 

கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனா என தகவல் வெளியான நிலையில் வியாபாரிகள் சங்கம் தரப்பில் விளக்கமளித்துள்ளது



கோயம்பேடு சந்தை கொரோனா காரணமாக கடந்த 5 மாத காலமாக மூடப்பட்டு கிடந்த நிலையில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 28 ஆம் தேதி திறக்கப்பட்டது.



இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனா என தகவல் வெளியானது. இதுகுறித்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராஜசேகர் விளக்கமளித்தார். அதில், 200 கடைகள் திறக்கப்பட்டு உள்ள கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. வியாபாரிகள் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கிறார்களா? என்று கண்காணிக்கப்படுகிறது.திருமழிசையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பின் காய்கறி விலை குறைந்துள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், அனைத்து கடைகளும் திறக்கப்படும் நிலையில் கூட்ட நெரிசல் தானாகவே குறையும் என்றும் தெரிவித்தார்.



கோயம்பேட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சந்தை மீண்டும் மூடப்பட்டு விடுமோ என்ற அச்சம் வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை