Skip to main content

முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் கொரோனாவால் உயிரிழப்பு!

Oct 15, 2020 235 views Posted By : YarlSri TV
Image

முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் கொரோனாவால் உயிரிழப்பு! 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவிலிருந்து வெளியேறியவர் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல். இவர் தற்போது அமமுக பொருளாளராக உள்ளார். கட்சி பணிகளை தீவிரமாக செய்து வந்த இவருக்கு காய்ச்சல், சளித் தொல்லை இருந்துள்ளது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து வெற்றிவேல் கடந்த 6-ஆம் தேதி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.



வெற்றிவேலுக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர் மற்றும் செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இன்று மாலை அவரது உடல்நிலையில் மாற்றமில்லை என்றும் மிகவும் மோசமாகி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை