Skip to main content

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இம்சை வதையில் ஈடுபட்ட மாணவர்களுக்குக் கடும் தண்டனை அறிவிப்பு!

Oct 14, 2020 71 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இம்சை வதையில் ஈடுபட்ட மாணவர்களுக்குக் கடும் தண்டனை அறிவிப்பு! 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது இம்சை வதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்நாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரைத்துள்ளது.புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பதவியேற்ற பின்னர், பல்கலைக்கழகத்தில் இம்சை வதையில் ஈடுபடுபவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்காக விரைவு பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், குற்றம் இடம்பெற்று ஒரு மாத காலத்தினுள் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது.பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைப் பிரகாரம், யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையைச் சேர்ந்த மூன்றாம் வருட மாணவர்கள் 4 பேருக்குக்கு  ஒரு கல்வி ஆண்டு காலம் கல்வி கற்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், பல்கலைக்கழக அல்லது துறைசார் மாணவர் ஒன்றியப் பதவி நிலைகளை வகிக்க முடியாத வகையிலான தடையுத்தரவு மற்றும் கல்வி கற்கும் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதிகளில் தங்கியிருந்து கற்பதற்கான வசதிகளும் மறுக்கப்படல் வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அத்துடன் குற்றத்தின் பாரதூரத் தன்மை கருதி மாணவி ஒருவருக்குக் கடும் எச்சரிக்கையுடனான விலக்களிப்புக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் இரண்டாவது கூட்டம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, கடந்த மாதம் 03 ஆம் திகதி சித்த மருத்துவத்துறையில் இடம்பெற்ற இம்சை வதை தொடர்பிலான இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. சித்த வருத்துவத் துறையில் இடம்பெற்ற இம்சை வதை தொடர்பில் ஆரம்பகட்ட பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அதனடிப்படையிலான குற்றப்பத்திரிகை மீதான முறைசார் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, விசாரணை அறிக்கை இன்று மாலை மாணவர் ஒழுக்காற்றுச் சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைக்கமைய தண்டனைக்குரியவர்களுக்கான அறிவித்தல்கள் நாளை துணைவேந்தரால் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையில், பல்கலைக்கழகத்தின் சகல பீடாதிபதிகளான பத்துப் பேரும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்ட இரண்டு பேரவை உறுப்பினர்களும், மாணவ ஆலோசகர் ஒருவரும், பிரதிச் சட்ட நிறைவேற்று அதிகாரி (புறொக்டர்) ஒருவரும், போதனைசார் விடுதிக் காப்பாளர்கள் இருவருமாக இருபது பேர் அங்கம் வகிப்பதுடன், பதிவாளரின் நியமனப் பிரதிநிதியாக மாணவர் நலச் சேவைகளுக்கான உதவிப்பதிவாளர் செயலாளராகவும் செயற்படுகின்றனர்.இன்றைய கூட்டத்தில், சித்த மருத்துவத் துறை மாணவர்களுக்கான தண்டனைகள் பரிந்துரைக்கப்பட்டதுடன், இனிவரும் காலத்தில் இதே பொறி முறையில் இம்சை வதையில் ஈடுபட்டு, குற்றம் நிரூபிக்கப்படுமிடத்து கற்றல் நடவடி;க்கைகளுக்கான தடை, சிறப்புத் துறைகளைகளுக்கான தடை, முதலாம், இரண்டாம் வகுப்புச் சித்திகளுக்கான தகைமையிழப்பு, மகாபொல மற்றும் நிதியுதவிகளைத் தடை செய்தல், பல்கலைக்கழக அல்லது துறைசார் மாணவர் ஒன்றியப் பதவி நிலைகளை வகிக்க முடியாத வகையிலான தடையுத்தரவு மற்றும் கல்வி கற்கும் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதிகளில் தங்கியிருந்து கற்பதற்கான வசதிகளும் மறுக்கப்படல் உட்பட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து பல்கலைக்கழக மாணவர் பதிவு இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

1 Days ago

பசிலின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல்ல – ரணில்

1 Days ago

குளிர்காலத்தில் மேலும் ஒரு புதிய கொரோனா மாறுபாடு உருவாகும் - பிரான்ஸ் நிபுணர் எச்சரிக்கை

1 Days ago

ஆர்யா - சாயிஷா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

1 Days ago

மாகாணசபை முறைமை என்பது தோல்வியடைந்துள்ளது – மங்கள சமரவீர

1 Days ago

சார்பட்டா படத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு!

1 Days ago

சென்னையில் 2வது விமான நிலையம்: தமிழக அரசுக்கு கோரிக்கை!

1 Days ago

நேற்றைய தினம் வீதி விபத்துக்களால் 8 பேர் பலி - அஜித் ரோஹண

1 Days ago

இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வுகாண வழிகாட்டு குழு அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

1 Days ago

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 121 பேர் கைது!

1 Days ago

கொரோனாவால் 2 மாதங்களில் 645 குழந்தைகள், பெற்றோரை இழந்து தவிப்பு - மந்திரி ஸ்மிரிதி இரானி

2 Days ago

சீனாவில் கொட்டித் தீர்த்த மழை - பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு!

2 Days ago

ரஷ்யாவில் மேலும் 24,471 பேருக்கு கொரோனா பாதிப்பு!

2 Days ago

தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை - முக ஸ்டாலின் வலியுறுத்தல்!

2 Days ago

சாண்டி - சில்வியா தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது!

2 Days ago

யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு சாமி காவியும் உள்ளனர். ஆலயத்தினுள் மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல சில ஆலயங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த ஆலயத்தின் வில்லு மண்டபம் வரையில் மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமை சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர அலங்கார உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது. கொரோனா அச்சம் காரணமாக சிறிய தேரில் பஞ்சமுக பிள்ளையார் எழுந்தருளி உள்வீதி உலா வந்தார். அதன் போது எழுந்தருளி பிள்ளையாரை இராணுவத்தினர் பிள்ளை தண்டில் காவி உள்வீதி உலா வந்தனர். கொரோனா அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் பலரும் ஆலயத்தினுள் உள்நுழைய அனுமதிக்கப்படாத நிலையில் பல இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன் சுவாமி காவியும் உள்ளனர். ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் பலரும் ஆலயத்தின் வெளியே நிற்க இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு சுவாமி காவிமை , குறித்த ஆலயத்தில் பல ஆண்டுகாலமாக வழிபாடு செய்து வரும் அடியவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அவர்கள் தமது இயலாமையை பிள்ளையாரிடம் கூறி ஆலயத்தின் வெளியே நின்று பஞ்சமுக பிள்ளையார் , எழுந்தருளி பிள்ளையாரின் தரிசனத்தை கண்டு வீடு திரும்பினர் என இயலாமையுடன் ஆலயத்தின் அருகே வசிக்கும் அடியவர் ஒருவர் கூறினார்!

2 Days ago

ஒரே நாளில் இரண்டு விழாவை கொண்டாடிய யோகி பாபு!

2 Days ago

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விஜய் பட நடிகை!

2 Days ago

விரைவில் உட்கட்சி தேர்தல் – ஓபிஎஸ் -ஈபிஎஸ் இன்று ஆலோசனை!

3 Days ago

திங்கட்கிழமை பதவியேற்கின்றார் வடக்கின் புதிய பிரதம செயலாளர்!

3 Days ago

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மதிப்பெண் : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிபிஎஸ்இ நிர்வாகம்

3 Days ago

கிழக்கில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடல்!

3 Days ago

நடக்கப்போவது என்ன முற்றுகைக்கு தயாராகும் கொழும்பு!

3 Days ago

2032ல் ஒலிம்பிக் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறும் -சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு!

3 Days ago

மதுசூதனனின் உடல்நலம் விசாரிக்க ஒரே நேரத்தில் வந்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா!

3 Days ago

நெல்லை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது திருச்சி அணி!

3 Days ago

யாரும் எவ்விதமான போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் - எடியூரப்பா டுவீட்

3 Days ago

சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில்களை மூழ்கடித்த வெள்ளம் -இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்த பயணிகள்!

3 Days ago

புதுவித முயற்சியில் ஹன்சிகாவின் த்ரில்லர் படம்.. விரைவில் அறிவிப்பு!

4 Days ago

மத்திய சீனாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கினால் 12 பேர் பலி!

4 Days ago

அருள்நிதியின் படத்திற்கு வித்தியாசமான தலைப்பு.. போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

4 Days ago

பக்ரீத் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!

4 Days ago

திருப்பதி கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 60 கிலோ எடையிலான கொப்பரை உண்டியல்!

4 Days ago

செப்டம்பர் மாத இறுதிக்குள் 3 இலட்சம் தடுப்பூசிகள்-ஜீவன்

4 Days ago

தியாகத் திருநாள் இன்று பக்ரீத் பண்டிகை!

4 Days ago

உலக வாழ் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் – பிரதமர் மஹிந்த

4 Days ago

அதிமுக கட்சிக் கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை கிடையாது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

4 Days ago

ஆபாச பட வழக்கில் நடிகை சில்பா ஷெட்டியின் கணவர் போலீசில் சிக்கியது எப்படி?

4 Days ago

1,000 ரூபாய் சம்பள விவகாரம் – ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற அரவிந்த குமார்!

5 Days ago

இந்தியாவிலேயே முதலிடத்தில் சென்னை… தடுப்பூசி செலுத்தியதில் புதிய சாதனை!

5 Days ago

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கூட்டமைப்பு ஆதரவு! – சம்பந்தன் தெரிவிப்பு

5 Days ago

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா : ஒரே நாளில் 30,093 பேருக்கு தொற்று!

5 Days ago

றிசாட் வீட்டில் சிறுமி மரணம் ; பிரதேச சபை உறுப்பினர் கண்டனம்!

5 Days ago

நடிகை ரோஜா பதவி நீக்கம் – ஆந்திர அரசியலில் அதிரடி!

5 Days ago

இலங்கையில் உலகின் விலைமதிப்பற்ற இரத்தின கற்கள் இலங்கை வங்கிக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது!

5 Days ago

மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம்!

5 Days ago

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நடுவராக இலங்கைப் பெண்...

5 Days ago

பண்ணை வீட்டில் மது விருந்துடன் ஆபாச நடனம்!

5 Days ago

உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் இன்று!

6 Days ago

ஜனாதிபதியுடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு - நீட் தேர்வு, மேகதாது அணை பிரச்சினை குறித்து பேசுகிறார்

6 Days ago

மேலும் 60,000 பைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்தன!

6 Days ago

செல்பி எடுக்க பணம் கேட்கும் பா.ஜ.க. மந்திரி!

6 Days ago

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன - இங்கிலாந்து அரசு அறிவிப்பு!

6 Days ago

24 மணிநேரத்தில் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 3,009 பேர் கைது!

6 Days ago

மும்பையில் கனமழையில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு, சுற்றுச்சுவர்கள் இடிந்து விழுந்தது 30 பேர் பலி!

6 Days ago

மகள் கடத்தல் விவகாரத்தில் மோதல் பாகிஸ்தானுக்கான தூதரை திரும்ப அழைத்தது ஆப்கான்: அதிபர் அஷ்ரப் கனி உத்தரவு!

6 Days ago

பாராளுமன்றம் இன்று கூடுகிறது - முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!

6 Days ago

சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா - தனிமைப்படுத்திக் கொண்டார் இங்கிலாந்து பிரதமர்!

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை