Skip to main content

700 ஆண்டுகளுக்கு முந்தைய சுரங்க நீர் வழிப்பாதை கண்டுபிடிப்பு!

Oct 09, 2020 241 views Posted By : YarlSri TV
Image

700 ஆண்டுகளுக்கு முந்தைய சுரங்க நீர் வழிப்பாதை கண்டுபிடிப்பு! 

தஞ்சையில் 700 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் காலத்தில் பயன்பாட்டில் இருந்த சுரங்க நீர் வழிப்பாதைகள் கண்டறியப்பட்டுள்ளது.



தஞ்சை பெரிய கோயில் அருகே உள்ள சிவகங்கை குளத்தில் இருந்து ஐயங்குளத்திற்கு தண்ணீர் செல்ல மன்னர்கள் காலத்தில் சுரங்க நீர் வழிப்பாதைகள் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் அவை மறைந்து



பயன்பாடற்று போனது. இந்நிலையில், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் முயற்சியால் தற்போது ஐயங்குளத்திற்கு அருகே 3 சுரங்க வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் சுமார் 700



ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்ததாக தெரிவித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், நீர் வழிப்பாதையில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்ய இவை கட்டப்பட்டதாகவும் தெரிவித்தனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நீர் வழிப்பாதைகளை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள்,



சிவகங்கை குளம் வரை மீதமுள்ள நீர்வழிப்பாதைகளை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், ஐயங்குளத்திற்கு தண்ணீர் செல்ல தற்காலிக நடவடிகையும் மேற்கொள்ளபட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், மற்ற பகுதிகளிலும் நீர் வழி பாதைகளை கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் சிவகங்கை குளத்தில் இருந்து ஐயங் குளத்திற்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை