Skip to main content

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்!

Oct 11, 2020 259 views Posted By : YarlSri TV
Image

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்! 

நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 2021ல் தமிழகத்தில் ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியாக பாஜக இருக்கும். தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி இல்லை; அதிமுக தலைமையில்தான் கூட்டணி உள்ளது. திமுக வரும் தேர்தலில், மூன்றில் ஒரு பங்கு இடம்பெற்றாலே சந்தோஷம் தான் என்றார்.



தொடர்ந்து பேசிய அவர், 300 வருடங்காளாக குமரியில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கேரளா- தமிழகம் ஒருங்கிணைங்கும் சாமி ஊர்வலத்திற்கு கேரளா அரசு தடைவிதித்திருப்பது அரசியல் அச்சத்தை காட்டுகிறது என்று விமர்சித்தார். முதல்வர் வேட்பாளராக முதல்வர் பழனிசாமியை ஏற்காவிட்டால் அவர்களுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். இதன் எதிரொலியாக பொன் . ராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை