Skip to main content

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 81 ஆயிரத்தை கடந்தது!

Sep 24, 2020 244 views Posted By : YarlSri TV
Image

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 81 ஆயிரத்தை கடந்தது! 

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.



இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.



இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 81 ஆயிரத்தை கடந்துள்ளது. 



குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,085 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,079 பேரும், பிரேசிலில் 906 பேரும் உயிரிழந்துள்ளனர்.



தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 20 லட்சத்து 83 ஆயிரத்து 275 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



வைரஸ் பரவியவர்களில் 74 லட்சத்து 43 ஆயிரத்து 936 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 62 ஆயிரத்து 354 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.



கொரோனாவில் இருந்து 2 கோடியே 35 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 81 ஆயிரத்து 219 பேர் உயிரிழந்துள்ளனர்.



கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-



அமெரிக்கா - 2,06,560



பிரேசில் - 1,39,065



இந்தியா - 90,020



மெக்சிகோ - 74,348



இங்கிலாந்து - 41,862



இத்தாலி - 35,758



பெரு - 31,870



பிரான்ஸ் - 31,459



ஸ்பெயின் - 31,034



ஈரான் - 24,840



கொலம்பியா - 24,746



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை