Skip to main content

சீனாவிலிருந்து வந்த வைரசை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்!

Sep 27, 2020 332 views Posted By : YarlSri TV
Image

சீனாவிலிருந்து வந்த வைரசை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்! 

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. கொரோனா வைரசை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பியதாகவும், இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாக இருப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் சீனா கொரோனா வைரஸ் விவகாரத்தில் மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வதாகவும் கூறுகிறது. இந்தநிலையில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின் போது கொரோனா வைரஸ் குறித்து பேசிய ஜனாதிபதி டிரம்ப், சீனாவை கடுமையாக விமர்சித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது



சீனாவிலிருந்து வந்த வைரசை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம். அவர்கள் அதை ஒருபோதும் அனுமதித்திருக்கக் கூடாது. சீன வைரஸ் நம் நாட்டை தாக்குவதற்கு முன் எனது நிர்வாகம் மிகப்பெரிய பொருளாதாரத்தை உருவாக்கி இருந்தது. அதை நாம் மீண்டும் உருவாக்குவோம். தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன். அடுத்த 4 ஆண்டுகளில் அமெரிக்காவை உலகின் உற்பத்தி வல்லரசாக மாற்றுவேன்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

24 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை