Skip to main content

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புனரமைக்கப்பட்டு தரமுயர்த்தப்பட்ட குழந்தைகள் விடுதி மற்றும் மருத்துவ பட்டதாரிகளின் தங்குமிட விடுதி!

Sep 26, 2020 228 views Posted By : YarlSri TV
Image

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புனரமைக்கப்பட்டு தரமுயர்த்தப்பட்ட குழந்தைகள் விடுதி மற்றும் மருத்துவ பட்டதாரிகளின் தங்குமிட விடுதி! 

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புனரமைக்கப்பட்டு தரமுயர்த்தப்பட்ட குழந்தைகள்  விடுதி மற்றும் உள்ளக மருத்துவ பட்டதாரிகளின் தங்குமிட விடுதி என்பன  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி சதாசிவம் சிறிதரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.



வைத்திய அத்தியட்சகர் ஆர்.பி.ஜீ விமலசேன மற்றும் குழந்தை வைத்திய நிபுணர் சிவலிங்கம் ஜெயபாலன் அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இடம்பெற்றது.



பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் விருந்தினர்கள் வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் இருந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டனர்.



முதலில் புனரமைக்ப்பட்டு தரமுயர்த்தப்பட்ட குழந்தைகள் விடுதியினை திறந்து வைத்தார். பின் விடுதி வைத்தியர் ஜெயபாலன் அவர்களிடம் விடுதியில் உள்ள நிறைகுறைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். 



குறித்த விடுதி குழந்தைகளுக்கு என விசேடமாக தரமுயர்தப்பட்ட கட்டில்கள் மற்றும் பல்வேறு வசதிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சம். அதன் பின்னர் பணிப்பாளர் நாயகம் அவர்களினால் உள்ளக மருத்துவ பட்டதாரிகளின் தங்குமிட விடுதி திறந்து வைக்கப்பட்டது. இது தொடர்பில் குழந்தை வைத்திய நிபுணர் சிவலிங்கம் ஜெயபாலன் அவர் கருத்து தெரிவிக்கையில்:- 



வடகாமம் வடக்கு யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசம். தற்போது குறித்த பகுதி மீள்குடியயேற்ற்திற்கு அனுமதிக்கப்பட்டு மக்கள் குடியமாந்து வருகின்றனர்.



இங்குள்ள மக்களுக்கு பல்வேறு மருத்து தேவைகள் காணப்படுகின்றன.மீள்குடியேற்ற பகுதியில் அதிகளவான சிறுவர்கள் உள்ளனர். இங்குள்ள சிறுவர் குழந்தைகளுக்கான சிறந்த வைத்திய சேவையினை பெற்றுக்கொடுக்கமுடியும். ஊள்ளக மருத்துவ விடுதி திறக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் உள்ளக மருத்துவர்கள் அதிகளவானோர் உள்வாங்கப்படுவார்கள்.



 வெகுவிரைவில் இதானல் மருத்துவர்களின் பற்றாக்ககுறையினை நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வலிவடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலை தற்போது படிப்படியாக வளர்ந்து வருகின்றது. வைத்தியசாலைக்கு இன்னும் பல்வேறு தேவைகள் உள்ளன. அவற்றினை நாங்கள் சுகாதார அமைச்சு ஊடாக பெற்றுக்கொண்டு விணைத்திறனான மருத்து சேவையினை செய்ய காத்திருக்கின்றோம்;;’’ என்றார்.  



இந்த நிகழ்வில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன், மகாண சுகாதார செயலாளர் வைத்தியர் பீ.செந்தில்நாதன்,  யாழ் மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாள் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி, வடமாகாண மருத்துவ சங்கத்தின் இணைப்பாளர் ரீ.காண்டீபன், வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், ஏணைய மருத்துவர்கள், வைத்தியசாலை தாதியர்கள், மருத்துவ மாணவர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனா.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை