Skip to main content

இலங்கை விமான போக்குவரத்து கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர் ஆர்.பிரேமல் டி சில்வா தெரிவித்துள்ளார்!

Sep 23, 2020 280 views Posted By : YarlSri TV
Image

இலங்கை விமான போக்குவரத்து கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர் ஆர்.பிரேமல் டி சில்வா தெரிவித்துள்ளார்! 

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உயர்தரத்தில் கல்விகற்று பின் மேற்படிப்புக்கு செல்லமுடியாத நிலையில் தொழில்வாய்ப்பாக எதிர்பார்த்து இருக்கும் இளைஞர்,யுவதிகளுக்கான இலங்கை விமான போக்குவரத்து கல்லூரியினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை விமானபோக்குவரத்து கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர் ஆர்.பிரேமல் டி சில்வா தெரிவித்துள்ளார்.



வடக்கு மாகாணத்தின் முதற்கட்டமாக தொழில்வாய்ப்பு உத்திகளுக்கான விமானபோக்குவரத்து கல்லூரியின் மையத்தினை அமைப்பது தொடர்பான உயர்மட்டக்கலந்துறையாடல் இன்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது.



இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே 



இலங்கை விமானபோக்குவரத்து கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர் ஆர்.பிரேமல் டி சில்வா தெரிவித்தார். மேலும் முதற்தடவையாக தமிழ் இளைஞர்களுக்கான இந்த கல்லூரியினை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் தார்மிக பொறுப்பு வாய்ந்தாக காணப்பட்டுள்ளது.குறிப்பாக யாழ்ப்பாணம் சர்வதேச விமானபோக்குவரத்து நிலையம் காணப்படுகின்றது. அண்மையாக காலத்தில் கொரோணா தொற்று காரணமாக விமான சேவைகள் அனைத்து நிறுத்தப்பட்டநிலை காணப்படுகின்றன.அவற்றிக்கான சேவை துரிதகதியில் ஆரம்பிக்கப்பட்டு அதனுடான தமிழ்மொழி தெரிந்தவர்களும் தொழில்வாய்ப்புக்கான இணைக்கப்படயுள்ளனர்..இந்த கல்லுர்ரியினை கட்டிட நிர்மாணப்பணிகள் நவம்பர் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டன.



எனவே தமிழ் தெரிந்த மாணவர்களையும் உள்ளீர்க்க இந்த அரிய சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்து இருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.



குறித்த கலந்துறையாடல் யாழ் சர்வதேச விமானபோக்குவரத்தின் கடந்தகால நடவடிக்கைகளை கண்டறிதல்,வடமாகாணத்தின் இலங்கை விமானபோக்குவரத்து கல்லூரியினை எந்த இடத்தில் நிர்மாணிப்பது.மற்றும் கல்லூரியில் கற்றல் பாடத்திட்டங்களுக்கான தொழில்வாய்ப்புக்களாக கல்லூரி கண்காணிப்பு தொழிலாளர்கள்,இளைகலை அபிவிருத்திபாடத்திட்டம்,நிர்வாக அலகுக்கான உத்தியோர்கத்தர்கள்,விமானநிலை தொழிலாளர்கள்,போன்ற பாடகொள்ளை சம்பந்தமாக இங்கு கலந்துறையாடப்பட்டன.



இவ் உயர்மட்ட சந்திப்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன்,யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்,மற்றும் இலங்கை விமானபோக்குவரத்து கல்லூரியின் உயர்அதிகாரிகள்,மற்றும் தொழில்துறைசார்ந்த கல்லூரியின் விரிபுரையாளர்கள் உள்ளிட்டவர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

19 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

19 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

19 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை