Skip to main content

உணவு கொண்டு வரலாம் கொரோனா நோயாளர்களுக்கு - ராஜஸ்தான் அரசின் அதிரடி அறிவிப்பு!

Sep 19, 2020 222 views Posted By : YarlSri TV
Image

உணவு கொண்டு வரலாம் கொரோனா நோயாளர்களுக்கு - ராஜஸ்தான் அரசின் அதிரடி அறிவிப்பு! 

கொரோனா நோயாளிகளுக்கு அவர்களது குடும்பத்தினர் உணவு கொண்டு வர ராஜஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.



இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், பாதிப்பு அதிகமாக இருக்கும் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால் மாநில அரசுகளுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படுவதால், கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு உறவினர்கள் சமைத்த உணவுகளை கொண்டு வந்து கொடுக்கலாம் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.



மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை, அவர்களது உறவினர்கள் பிபிஇ கிட் அணிந்து கொண்டு முழு பாதுகாப்புடன் சந்திக்கலாம் என்றும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் சமைத்த உணவுகளை கொண்டு வந்து கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.



வழக்கமாக கொரோனா உறுதியானவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால், அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனை தடுக்கும் பொருட்டு, ராஜஸ்தான் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை