Skip to main content

வைரஸ் காரணமாக பிரான்சில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள் தற்போது அதிகரித்துள்ளது!

Sep 12, 2020 316 views Posted By : YarlSri TV
Image

வைரஸ் காரணமாக பிரான்சில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள் தற்போது அதிகரித்துள்ளது! 

பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.<இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுருந்த மாவட்டங்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது



இந்த வாரத்தின் ஆரம்பத்தில் 28 மாவட்டங்கள் சிவப்பு எச்சரிக்கை வலையமாக இருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 42 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.



இன்று பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், தனது பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது நாட்டில் குறிப்பிட்ட, 42 மாவட்டங்களில் கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளர்.



தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக 9,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளை  பதிவு செய்த போதிலும் நாடுதழுவியௌ ஊரடங்கை அறிவிக்க  பிரான்ஸ் மறுத்துவிட்டது. அதற்கு பதிலாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், சோதனை  நடவடிக்கைகள் அதிகரிப்பு மற்றும் வைரஸ் உள்ளவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை 14 முதல் ஏழு நாட்கள் வரை குறைப்பதாக அறிவித்தார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை