Skip to main content

விவசாயிகள் அரியானா குருச்சேத்திரம் மாவட்டம் குருச்சேத்திர நகரில் தேசிய பெருவழி 44ல் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்!

Sep 13, 2020 250 views Posted By : YarlSri TV
Image

விவசாயிகள் அரியானா குருச்சேத்திரம் மாவட்டம் குருச்சேத்திர நகரில் தேசிய பெருவழி 44ல் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்! 

பாரதிய கிசான் யூனியன் தலைமையில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை காங்கிரஸ் ஆதரிப்பதாக அரியானா முன்னாள் பூபிந்தர் சிங் ஹூடா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.



மத்திய அரசு வெளியிட்டுள்ள 3 அவசர சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் அரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.



மத்திய அரசு அறிவித்துள்ள மூன்று அவசர சட்டங்களும் அமல் செய்யப்படும் நிலையில் குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளிடமிருந்து கோதுமை, நெல், கரும்பு போன்றவை கொள்முதல் செய்யப்பட மாட்டாது என்று கூட்டாய் எச்சரித்தார்.



மத்திய அரசு வெளியிட்ட முதல் அவசர சட்டம். விவசாயிகள் விளை பொருள் வர்த்தகம் மற்றும் வியாபாரம் அவசரச் சட்டம் 20 20.



இந்த அவசரச் சட்டம் மாநிலங்களில் மாநில சட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சந்தைகளில் மட்டுமே விவசாய விளை பொருள்களை விற்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தளர்த்துகிறது.



மாநில அரசு சட்டங்களுக்கு மேலாக மத்திய அரசின் அவசர சட்டம் அதிகாரம் உடையதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை விற்பனை செய்வதற்கான மண்டி அமைப்பு முறையை மத்திய அரசின் அவசர சட்டம் ரத்து செய்வதாக பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.



மத்திய அரசின் அவசர சட்டம் காரணமாக மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை குறைவாக விவசாயிகள் விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.



மாநில சட்டங்களின் கீழ் விவசாயிகளின் விளை பொருட்களை விற்பதற்காக நியமிக்கப்பட்டு உள்ள இடங்களைத் தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் விவசாயிகளின் விளை பொருள்களை விற்பனை செய்வதற்கு மத்திய அரசின் அவசர சட்டம் வகை செய்கிறது.



அரியானா மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஓம்பிரகாஷ் தாங்கர்



போராட்டத்தை நடத்தும் பாரதிய கிசான் யூனியன் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது விவசாயிகள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். உண்மையில் விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை விரிவான சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த அவசரச் சட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.



நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த அவசரச் சட்டங்கள் தொடர்பான குழப்பங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.



பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலிதளம் விவசாயிகளின் கவலைகளுக்கும் குழப்பங்களுக்கும் தீர்வு காணாமல் மத்திய அரசு அறிவித்துள்ள அவசர சட்டங்களுக்கு மாற்றாக முறையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று பாரதீய ஜனதாக் கட்சித் தலைமையை கேட்டுக்கொண்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை