Skip to main content

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் அதிகாரிகள் போலின்றி மக்களின் பிரதிநிதிகளாகச் செயற்படவேண்டும் - வடக்கு மாகாண ஆளுநர்

Sep 09, 2020 209 views Posted By : YarlSri TV
Image

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் அதிகாரிகள் போலின்றி மக்களின் பிரதிநிதிகளாகச் செயற்படவேண்டும் - வடக்கு மாகாண ஆளுநர்  

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் அதிகாரிகள் போலின்றி மக்களின் பிரதிநிதிகளாகச் செயற்படவேண்டும் -வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து



உள்ளூராட்சி சபைகளுக்கு பிரதேசத்தை ஆளுகின்ற அதிகாரம் உண்டு. எனவே உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், மக்களுக்கு மாறானவற்றை செய்யாது, அவர்களுடன் இணைந்து செயற்படவேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.



அத்துடன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் அரச அதிகாரிகள் போல் செயற்படாது மக்களின் தலைவர்களாகச் செயற்படவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், செயலாளர்களுடன்  நடத்திய கலந்துரையாடலிலேயே அவர் இவற்றை வலியுறுத்தினார்.



இந்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் இடம்பெற்றது. அதில் வடக்கு மாகாணத்தில் உள்ள மாநகர சபை, நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் ஆணையாளர், செயலாளர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



இதன்போது வடக்கு மாகாண உள்ளூராட்சி சபைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குடிதண்ணீர், பொதுச் சுகாதாரம் மற்றும் பொதுத் துறைகள், ஆளணிப் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன.



வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்ததாவது;



இலங்கை ஆட்சி முறையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கே ஆட்சி அதிகாரம் பல வழங்கப்பட்டுள்ளன. எனவே அவற்றின் தலைவர்கள் மக்களின் தலைவர்கள். மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்கான சேவையாற்றுவது உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களின் பணியாகும்.



அதிகாரிகள் போன்று நீங்கள் செயற்படக் கூடாது. மக்கள் சந்தைக்கான இடத்தைத் தெரிவு செய்யும் போது, காரணங்களைக் கூறி அவற்றை வேறு இடத்தில் அமைக்கக் கூடாது. அதனால் மக்கள் அவற்றை நாடாது போனால் பொது நிதி விரையமாகும். எனவே மக்கள் எங்கு கோருகின்றனரோ அங்கு சந்தையை அமைக்க நடவடிக்கையை எடுக்கவேண்டும்.



மேலும் ஆதன வரி அறவீடுகளை உரிய முறையில் அறவிட்டு பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்னெடுக்கவேண்டும். வாக்கு வங்கியை இலக்கு வைத்து மக்களுக்கான அபிவிருத்தியை செய்யாது விடாதீர்கள்.



உள்ளூராட்சி மன்றங்களுக்கு பல சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது அவற்றின் தலைவர்களின் கடமையாகும். நீதிமன்றங்கள் ஊடாக சில பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் - என்றார்.



இதேவேளை, இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரன் தெரிவித்ததாவது;



வடக்கு மாகாண சபை ஆட்சியிலிருந்த போது, உள்ளூராட்சி சபைகளின் அமைச்சராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவி வகித்த போது இவ்வாறு அனைத்து உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களையும் அழைத்து கலந்துரையாடவில்லை. ஆளுநர் தனது காலத்தில் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்று முயற்சிப்பதை இந்தக் கலந்துரையாடல் வெளிப்படுத்தியது.



அத்துடன், எமது பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மட்டத்துக்குக் கொண்டு சென்று தீர்வைப் பெற்றுத் தருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எமது பிரச்சினைகளை முன்வைத்துள்ளோம் - என்றார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை