Skip to main content

நிலைமையை சாதகமாகப் பயன்படுத்த எண்ண வேண்டாம் - ஜெனரல் பிபின் ராவத் எச்சரிக்கை

Sep 04, 2020 235 views Posted By : YarlSri TV
Image

நிலைமையை சாதகமாகப் பயன்படுத்த எண்ண வேண்டாம் - ஜெனரல் பிபின் ராவத் எச்சரிக்கை 

பாதுகாப்பு தலைமைத் தளபதி (சிடிஎஸ்) ஜெனரல் பிபின் ராவத் கூறியதாவது:-



சமீபத்திய காலங்களில் சீனாவின் பல ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நாம் கண்டு வருகிறோம். எனினும் நாம் இவற்றைக் கையாளும் திறன் கொண்டவர்கள். நமது முப்படைகள் எல்லைகளில் அச்சுறுத்தல்களைக் கையாளும் திறன் கொண்டவை



அந்த வகையில் சீன எல்லைப் பகுதியில் சீனா செய்யும் அனைத்து சதிகளையும் முறியடிக்கும் திறன் இந்திய ஆயுதப்படைகளுக்கு உள்ளது.



இந்தியாவின் எதிர் தாக்குதல் கொள்கைகள், நம்பகமான இராணுவ சக்தி மற்றும் பிராந்திய செல்வாக்கால் ஆதரிக்கப்படாவிட்டால், சீனாவின் முன்னுரிமையையும் அவர்களது அராஜகச் செயல்களையும் ஒப்புக்கொள்வது போலாகிவிடும்.



ஜம்மு-காஷ்மீரில் பிரச்சினையை உருவாக்க பாகிஸ்தான் ஒரு பினாமி யுத்தத்தை முன்னெடுத்து வருகிறது. தனது மண்ணில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து, நிதியுதவி செய்கிறது.



வடக்கு எல்லைகளில் வளர்ந்து வரும் எந்த அச்சுறுத்தலையும் பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்றும், இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு இந்தியாவுக்கு சிக்கலை உருவாக்கக் கூடும். எனினும், இந்தியாவை எதிர்த்து ஏதேனும் தவறான முயற்சியை மேற்கொண்டால், பாகிஸ்தான் பெரும் இழப்பை சந்திக்கும்



எனினும், இந்தியாவை எதிர்த்து ஏதேனும் தவறான முயற்சியை மேற்கொண்டால், பாகிஸ்தான் பெரும் இழப்பை சந்திக்கும். இந்தியா பல சிக்கலான அபாயங்களையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளது. அணுசக்தி முதல் வழக்கமான போர் நடவடிக்கைகள் என இந்த சவால்களின் வரம்பு விரிந்து பரந்து உள்ளது.



இந்தியா நிலையாக இருந்தாலும், நாட்டின் அரசியல் மற்றும் இராஜதந்திர தலைமை, எல்லையில் உள்ள நிலைமையை சமாளிப்பதில் பேச்சுவார்த்தைகள்தான் சரியான தீர்வை அளிக்கும் என்பதை கடுமையாக வலியுறுத்தியுள்ளது. 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை