Skip to main content

முதல் முறையாக ஒரு நபருக்கு இரண்டு முறை கொரோனா!

Aug 27, 2020 290 views Posted By : YarlSri TV
Image

முதல் முறையாக ஒரு நபருக்கு இரண்டு முறை கொரோனா! 

கொரோனாவிலிருந்து மீண்ட, ஹாங்காங்கைச் சேர்ந்த 30 வயது ஆணுக்கு நான்கு மாதங்கள் பிறகு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ள ஹாங்காங் பல்கலைகழகம் அவரது உடம்பில் தொற்று ஏற்படுத்திய வைரஸ் -ன் மரபணுவை ஆய்வு செய்துள்ளது.



அதில் முதல் முறை தொற்று ஏற்படுத்திய வைரஸ் மற்றும் இரண்டாவது முறை தொற்று ஏற்படுத்திய வைரஸ்-ல் காணப்படும் மரபணுக்களில் மாற்றங்கள் உள்ளதாக ஹாங்காங் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் இரண்டாவது முறை ஏற்படுவது மிகவும் அபூர்வம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.



கொரோனாவிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று இது வரை நம்பப்பட்டது. ஆனால் எத்தனை காலம் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று அறுதியிட்டு எந்த நாடும் இதுவரை கூறவில்லை என்றாலும் குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை எதிர்ப்பு சக்தி உடம்பில் இருக்கும் என நம்பப்பட்டது. அதன் பிறகு எதிர்ப்பு சக்தி மெல்ல மெல்ல குறையலாம் என்று கூறப்பட்டது. கொரோனா வைரஸ்கள் மரபணுவில் மாற்றம் செய்துக்கொள்வதால், ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.



சென்னையில் ஒரு சில நபர்களுக்கு இரண்டாவது முறை தொற்று ஏற்பட்டதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். பி சி ஆர் பரிசோதனையில், வைரஸ்-ன் இறந்த செல்கள் உடலில் இருந்தாலும், பாசிடிவ் காட்டும் என்பதால் இது வரை இரண்டாவது முறை தொற்று ஏற்பட்டதற்கான அறிவியல் பூர்வமான சான்று இல்லை. ஆனால் தற்போது கிடைத்துள்ள ஆதாரத்தின் படி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதன் மூலம் இயற்கைதான எதிர்ப்பு சக்தி கிடைத்தாலும் மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.



எனவே ஒரு முறை தொற்று வந்தவரும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி போன்ற நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை