Skip to main content

பார்ட்னராக பார்க்கிறோம், எதிரியாக அல்ல என்று இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்!

Aug 26, 2020 310 views Posted By : YarlSri TV
Image

பார்ட்னராக பார்க்கிறோம், எதிரியாக அல்ல என்று இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்துள்ளார்! 

லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டத்தில் இருந்து இந்தியா - சீனா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஏ.சி. பகுதியில் இருந்து சீனா ராணுவம் முற்றிலும் நகர்ந்து செல்ல வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.



ஆனால், லடாக் பகுதியில் மட்டும் பின் வாங்கிய சீன ராணுவம் மற்ற இடங்களில் இருந்து நகர தயக்கம் காட்டுகிறது. இதனால் பொருளாதாரம் மற்றும் ராணுவ அளவில் சீனாவுக்கு இந்தியா நெருக்கடி கொடுத்து வருகிறது.



இந்திய பாதுகாப்புப்படை தளபதி பிபின் ராவத் சில தினங்களுக்கு முன், பேச்சுவார்த்தை தோல்வி என்றால், ராணுவ நடவடிக்கைக்கு தயாராக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.



இந்நிலையில் இந்தியாவை நாங்கள் பார்ட்னராகவே பார்க்கிறோம் என்று சீனா தெரிவித்துள்ளது.



இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் இதுகுறித்து கூறுகையில் ‘‘சீனா இந்தியாவை எதிரியாகவும், மிரட்டலுக்கான வாய்ப்புள்ளது என்பதற்கு பதிலாக பார்ட்னராகவே பார்க்கிறது. எல்லை பிரச்சினையை இருதரப்பு நட்பில் பொறுத்தமான இடத்தில் வைக்க நம்புகிறோம்.



பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனையின் மூலம் வேறுபாடுகளை சரியாகக் கையாளுங்கள் மூலம் மீண்டும் இருதரப்பு உறவு முன்னதாகவே பழைய நிலைக்கு தள்ளும்’’ என்றார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை