Skip to main content

அமைச்சரவை அந்தஸ்துள்ள பாதுகாப்பு அமைச்சராகபதவி வகிப்பது யார்? - அனுரகுமார திஸாநாயக்க

Aug 29, 2020 248 views Posted By : YarlSri TV
Image

அமைச்சரவை அந்தஸ்துள்ள பாதுகாப்பு அமைச்சராகபதவி வகிப்பது யார்? - அனுரகுமார திஸாநாயக்க  

பதவி வகிப்பது யார் என்பது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று பாரளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.



அடுத்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போது:-



17,400 கோடி ரூபாய் அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சு ஒதுக்கப்பட்டுள்ளளது. அந்த அமைச்சு பொறுப்புக்கூறும் அமைச்சர் யார்?.



வர்த்தமானி அறிவித்தல் வெளியிடாவிட்டாலும் பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதியே உத்தியோகபூர்வமற்ற வகையில் வகித்து வருகிறார்.



இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது. இதன் மூலம் அரசியலமைப்புச் சட்டம் 3வது முறையாக மீறப்பட்டுள்ளது.



அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சர் யார் என்பதை அறிவிக்காது அந்த அமைச்சின் செலவுகளுக்கு நிதியை கோருவது எந்தளவுக்கு தார்மீகமானது என தேசிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை