Skip to main content

சென்னை விருகம்பாக்கத்தில் விஜயகாந்தை பார்க்க அனுமதிக்காததால் மது போதையில் காரை உடைத்துள்ளார்!

Aug 28, 2020 295 views Posted By : YarlSri TV
Image

சென்னை விருகம்பாக்கத்தில் விஜயகாந்தை பார்க்க அனுமதிக்காததால் மது போதையில் காரை உடைத்துள்ளார்! 

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்துக்கு கடந்த 25-ம் தேதி பிறந்த நாள் விழா அவரது இல்லத்தில் நடந்தது.



இந்த நிலையில் விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்காக, அவரது தீவிர ரசிகரான துரைப்பாக்கம் கணேஷ் நகரை சேர்ந்த சின்ன கேப்டன் (எ) வெற்றிவேல் (37) என்பவர் நேற்றிரவு 12 மணிக்கு விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு வந்துள்ளார்.



வெற்றிவேல் அளவுக்கதிகமான குடிபோதையில் இருந்ததால் வீட்டின் காவலாளி, அவரை தடுத்தி நிறுத்தி வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.



இதனால் கோவமடைந்த வெற்றிவேல் விஜயகாந்த் வீட்டுக்கு எதிர்புறம் நின்றிருந்த காரின் கண்ணாடியை கையால் குத்தி உடைத்துள்ளார்.



தகவலறிந்த விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வெற்றிவேலை காவல் நிலையம் அழைத்து சென்றனர். யாரும் புகார் கொடுக்காததால் இன்று காலை அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை