Skip to main content

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Aug 25, 2020 282 views Posted By : YarlSri TV
Image

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று பதிவிட்டுள்ளார். மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்க்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



கஜேந்திர சிங்கிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட 6 நாட்களுக்கு முன் அவரை மனோகர் லால் சந்தித்ததால் அவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் மனோகர் லாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.



இது தொடர்பாக அவர் தனது  ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் கடந்த வாரம் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கட்டாயம் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவும்“ என்றுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை