Skip to main content

பிரிட்டனில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி பொதுமக்கள் கூடினால், அவா்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்!

Aug 24, 2020 324 views Posted By : YarlSri TV
Image

பிரிட்டனில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி பொதுமக்கள் கூடினால், அவா்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்! 

பிரிட்டனில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி பொதுமக்கள் கூடினால், அவா்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.



இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:பிரிட்டனில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்காக ஒரே இடத்தில் 30 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், அனுமதிக்கப்பட்டதைவிட அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் கூடினால் அவா்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.



அவ்வாறு விதிகளை மீறி கூடுவோா் ஒவ்வொருவருக்கும் 100 பவுண்டுகளும் (சுமாா் ரூ.9,800), அதே நபா் மீண்டும் அந்தத் தவறைச் செய்தால் அவருக்கு 3,200 பவுண்டுகளும் (சுமாா் ரூ.3.43 லட்சம்) அபராதம் விதிக்கப்படவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை