Skip to main content

கேரள கல்வி அமைச்சருக்கு எதிராக மத்திய நிதி அமைச்சகம் விசாரணை!

Aug 23, 2020 262 views Posted By : YarlSri TV
Image

கேரள கல்வி அமைச்சருக்கு எதிராக மத்திய நிதி அமைச்சகம் விசாரணை! 

மத்திய அரசின் அனுமதி இன்றி ெவளிநாட்டு உதவிகளை பெற்றதாக  கேரள கல்வித்துறை அமைச்சர் ஜலீல் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு பற்றி, மத்திய நிதி அமைச்சகம் விசாரணை ெதாடங்க  உள்ளது. தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதே தூதரகத்தில் இருந்து கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஜலீல் உதவி பெற்ற விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன் மலப்புரம் மாவட்டத்தில் அமீரக தூதரகம் சார்பில் ரம்ஜான் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.



இதில் ஏழைகளுக்கு இலவச உணவு ெபாருட்கள் வழங்கப்பட்டன. தூதரக ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதுபோல் துபாயில் இருந்து தூதரக பார்சல் வழியாக குரான் நூல்களை வாங்கியதும் அடுத்த சரச்சையை ஏற்படுத்தியது.  தூதரகங்களுடன் மாநில அமைச்சர் உட்பட யாரும் நேரடியாக எந்த உதவியும் பெறக்கூடாது என்பது வெளியுறவுத்துறை சட்டமாகும். இதை மீறிய ஜலீலுக்கு எதிராக நடவடிக்ைக எடுக்க மத்திய நிதி அமைச்சகத்திற்கு ஏராளம் புகார்கள் சென்றன. இதையடுத்து ஜலீலுக்கு எதிராக விசாரணை நடத்த மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.



மேலும் என்ஐஏவும் விசாரணை நடத்த தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அமைச்சர் ஜலீல், எந்த விசாரணையையும் சந்திக்க தயார் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன் என்றார். இதற்கிடையே அமைச்சரின் பாதுகாவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் ஜலீல் சுய தனிமைக்கு சென்றுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை