Skip to main content

மீரா மிதுனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மை எரித்த இளைஞர்கள்!

Aug 20, 2020 265 views Posted By : YarlSri TV
Image

மீரா மிதுனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மை எரித்த இளைஞர்கள்! 

நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா பற்றி நடிகை மீரா மிதுன் என்பவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவரது பரப்பி வருகிறார்.



இதனையடுத்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி கலாம் சேவை மையம் சார்பில் நேற்று கிழக்கு காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.



நடிகர் சூர்யா ஜோதிகா உள்ளிட்டோரை அவதூறாக நடிகை மீரா மிதுன் பேசியதாக அவர் மீது  புகார் மனு கொடுக்கப்பட்டது.  இந்நிலையில், இந்தப் புகார் மனு குறித்து நடிகை மீரா மிதுன் நடிகர் வடிவேல் காமெடி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் பதிவு செய்துள்ளார்.



மீரா மிதுனை இதுபோன்ற தொடர் செயல்களைக் கண்டித்து கலாம் சேவை மையத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை அருகே நடிகை மீரா மிதுனின் உருவ பொம்மை எரித்தும் அவர் படத்தை செருப்பால் அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை