Skip to main content

ஆசையை நிறைவேத்தணும்’: லட்சியத்தை நோக்கி அஷ்ரிதா ஸ்ரீதாஸ்!

Aug 14, 2020 264 views Posted By : YarlSri TV
Image

ஆசையை நிறைவேத்தணும்’: லட்சியத்தை நோக்கி அஷ்ரிதா ஸ்ரீதாஸ்! 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய `நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் முந்தைய பாகத்தில், வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் அஷ்ரிதா ஸ்ரீதாஸ். 3 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தற்போது மாடலிங், சீரியல் என பிஸியாகச் சுழன்றுக் கொண்டிருக்கிறார்.



அஷ்ரிதாவின் படங்கள் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகின்றன. அஷ்ரிதாவின் பூர்வீகம் கேரளா. ஆனால் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தான். அவரின் அப்பா புரொடக்‌ஷன் மேனேஜரா இருந்தவர்.



பத்தாவது படிக்கும் போது அப்பாவை இழந்த அஷ்ரிதா, அவர் மூலமாக, மூன்று வயதிலேயே மீடியாவில் நுழைந்திருக்கிறார். `அப்பா அம்மா’ என்கிற அந்த சீரியல் தான் அஷ்ரிதாவுக்கு முதல் அறிமுகத்தைக் கொடுத்தது.



சீரியல் வாய்ப்பு தொடர்ந்து அமையாத காரணத்தினால், அந்த நேரங்களில் மாடலிங் பக்கம் கவத்தைத் திருப்பினார் அஷ்ரிதா. இப்போது, மாடலிங், சீரியல், சினிமான்னு பிஸியாக இருக்கிறார்.



”எப்பவும் சீன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி கண்ணை மூடி, அப்பாவை நினைச்சுப்பேன். முதல் சீரியலில் `நாகேஷ்’ தாத்தாவோடு நடிச்சேன். அவர் எவ்வளவு பெரிய லெஜண்ட் என அந்தக் குழந்தை வயசில் தெரியாது.



அவரோடு ஜாலியா விளையாடுவேன். ஷீட்டிங் ஸ்பாட்ல என்கிட்ட நிறைய விடுகதைகள் கேட்பார். அவர் நடிகர் மட்டுமல்ல, மிகப்பெரிய ஜீனியஸ்.



அத்தனை அழகா கணக்குப் போடுவார். சின்ன சின்ன விஷயங்களை தெளிவா புரிய வைப்பார். அவருடன் நடிச்சது என் பாக்கியம்” என மகிழ்கிறார் அஷ்ரிதா.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை