Skip to main content

முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறத!

Aug 13, 2020 287 views Posted By : YarlSri TV
Image

முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறத! 

முல்லை பெரியாறு அணை நீரை நம்பி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. முதல் போக சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் முல்லை பெரியாறு அணையில் ஜூன் மாதம் 115 அடி நீர் மட்டும் இருந்ததால் பாசனத்திற்காக நீர் திறக்கப்படவில்லை.



இந்நிலையில் கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியை கடந்துள்ளது. இதனால் முதல் போக நெல் சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.



சாகுபடிக்காக 200 கன அடியும், குடிநீருக்காக 100 கன அடியும் என மொத்தமாக 300 கன அடி நீர், 120 நாட்களுக்கு திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை