Skip to main content

முழக்கங்கள், காவடிகள் இல்லாமல் வெறிச்சோடிய திருத்தணி மலைக்கோவில்!

Aug 12, 2020 297 views Posted By : YarlSri TV
Image

முழக்கங்கள், காவடிகள் இல்லாமல் வெறிச்சோடிய திருத்தணி மலைக்கோவில்! 

ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அரோகரா முழக்கங்கள், காவடிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.



முருகனின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா மற்றும் தெப்ப உற்சவம் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும். பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து மலை கோவிலுக்கு சென்று முருகனை வழிபடுவார்கள். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மார்ச் 22 முதல் ஐந்து மாதங்களாக கோவில் மூடப்பட்டுள்ளது. இதனால் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா ரத்து செய்யப்பட்டது.



இந்நிலையில் ஆடிக் கிருத்திகையையொட்டி இன்று அதிகாலை கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் காவடிகளுடன் மலைக் கோயிலுக்கு வருவதை தடுக்கும் வகையில் மலைக்கோயில் சுற்றி 100க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் பக்தர்கள் ஒருசிலர் மட்டும் சரவண பொய்கை திருக்குளம் அருகில் முதல் படியில் காவடி செலுத்தி முருகப் பெருமானை வணங்கி செல்கின்றனர்.



இன்று மாலை தெப்ப உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் மண்டபத்தில் 20க்கு 20 அளவு கொண்ட நீர் தேக்க தொட்டி தற்காலிகமாக அமைக்கப்பட்டு அதில் உற்சவர் அருள் பாலிப்பார். பக்தர்கள் திருக்கோயில் இணையதள தொலைக்காட்சி மூலம் விழாவை நேரலையில் காண திருக்கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை