Skip to main content

வற்றாப்பளை ஆலய உற்சவத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதி....!

Jun 09, 2020 317 views Posted By : YarlSri TV
Image

வற்றாப்பளை ஆலய உற்சவத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதி....! 

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்திற்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று வருகை தந்திருந்தார்.



நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ள மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.



ஆலயத்தை சூழ இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதோடு நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.



இந்நிலையில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மாலை 5 மணியளவில் ஆலயத்தில் வழிபாடுகளில் கலந்து கொண்டதோடு, ஆலய வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்து வறிய குடும்பங்கள் சிலவற்றுக்கு ஆலய முன்றலில் வைத்து உலருணவு பொதிகளையும் வழங்கி வைத்தார்.



இவர் வருகைதந்து ஆலய வளாகத்தில் நின்றபோது விமானப்படையினர் ஆலயத்துக்கு உலங்குவானூர்தி மூலம் மலர் தூவினர்.



மலர் தூவும் செயற்பாடு சில ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை