Skip to main content

ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 456 கனஅடியில் இருந்து 1,796 கனஅடியாக இன்று அதிகரித்து உள்ளது.

Jun 09, 2020 402 views Posted By : YarlSri TV
Image

ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 456 கனஅடியில் இருந்து 1,796 கனஅடியாக இன்று அதிகரித்து உள்ளது. 

தென்னிந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழகத்தின் 2வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை. இந்த அணையின் கொள்ளளவு 105 அடியாகும்.தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.  இதன்படி, அணைக்கு நீர்வரத்து 456 கனஅடியில் இருந்து 1,796 கனஅடியாக இன்று அதிகரித்து உள்ளது.  இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.46 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 15.4 டி.எம்.சி.யாக இருக்கிறது.  அணையில் இருந்து பவானி ஆற்றுக்கும், வாய்க்கால் பாசனத்திற்காகவும் 500 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

19 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை