Skip to main content

கொரோனா வைரஸ் : கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 66 லட்சத்து 98 ஆயிரமாக உயர்வு...!

Jun 05, 2020 291 views Posted By : YarlSri TV
Image

கொரோனா வைரஸ் : கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 66 லட்சத்து 98 ஆயிரமாக உயர்வு...! 

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 66 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 213 நாடுகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 93 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 32 லட்சத்து 49 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். வைரஸ் பரவலால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலையிலுள்ளது. அந்நாட்டில் 19 லட்சத்து 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை