Skip to main content

ஈரானில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது

Jun 05, 2020 250 views Posted By : YarlSri TV
Image

ஈரானில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது 

 பாகிஸ்தான் கராச்சி நகரில் குடியிருப்பு பகுதியில் விழுந்து சுமார் 100 பேரை பலி கொண்ட விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டு பிரான்சில் ஆய்வு செய்யப்பட்டன. இதில் விபத்துக்குள்ளான விமானத்தை ஓட்டிய விமானி, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்ற வில்லை என தெரிய வந்துள்ளது.ஈரானில் தொடர்ந்து 2-வது நாளாக 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மார்ச் 30-ந் தேதிக்கு பிறகு இது அதிக எண்ணிக்கையாக பார்க்கப்படுகிறது. எனவே அங்கு கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையாக இது இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது.இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானது குறித்த அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர்,எனக்கு கொரோனா வைரஸ் தாக்கியதை எளிதாக எடுத்துக்கொண்டேன். என் விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி. இதன்காரணமாக மற்றவர்கள் எப்படி இதை அனுபவித்திருப்பார்கள் என்பதை என்னால் புரிய முடிந்தது” என கூறினார். சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் ஆன்லைனில் சீன மக்கள் சினிமா பார்க்கத் தொடங்கினர். அங்கு 12 ஆயிரம் திரையரங்குகள் இருந்து வந்த நிலையில் ஆயிரக்கணக்கான திரையரங்குகள் நிரந்தரமாக மூடப்படும் நிலை உருவாகும் என தெரிய வந்துள்ளது.சுவீடனில் கொரோனா வைரஸ் பரவல் தடுக்க ஊரடங்கு போடப்படவில்லை. இந்த நிலையில் அங்கு பலர் அந்த தொற்றால் மரணம் அடைந்து விட்டதாக அந்த நாட்டின் தொற்றுநோயியல் தலைமை நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல்ஒப்புக்கொண்டுள்ளார்.இத்தாலி தவிர்த்து பிற அண்டைநாடுகளுடனான தனது எல்லையை ஆஸ்திரியா திறக்கிறது. இனி ஆஸ்திரியாவில் நுழைய தடைகள் இருக்காது என அதன் வெளியுறவு மந்திரி அலெக்சாண்டர் சாலன்பெர்க் கூறி உள்ளார்.

 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை