பாடகர் வாஜித் கான் சீறுநீரக தொற்று காரணமாக காலமானார் .
Jun 01, 2020 346 views Posted By : YarlSri TV
பாடகர் வாஜித் கான் சீறுநீரக தொற்று காரணமாக காலமானார் .
பிரபல பாலிவுட்இசையமைப்பாளர் மற்றும் பாடகர் வாஜித் கான் ( வயது 42) சீறுநிரக தொற்று காரணமாக சில நாட்களுக்கு முன் செம்பூரின் சூரானா மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவரது உடல் நிலை மோசமானது. இதை தொடர்ந்து அவர் இன்று காலை காலமானார்.வாஜித் இறந்த செய்தியை இசையமைப்பாளர் சலீம் மெர்ச்சண்ட் உறுத்தி படுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் கூறும் போது
அவருக்கு சிறுநீரக பிரச்சினை இருந்தது, சிறிது நாட்களுக்கு முன்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் அவருக்கு சிறுநீரக தொற்று இருப்பது பற்றி தெரிய வந்தது ... கடந்த நான்கு நாட்களாக அவர் வென்டிலேட்டரில் இருந்தார், அவரது நிலைமை மோசமடையத் தொடங்கியது இன்று காலை காலமானார் எனகூறினார்.சஜித்- வாஜித் இருவரும் சல்மானின் 1998 ஆம் ஆண்டு வெளியான "பியார் கியா தோ தர்ணா க்யா" திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமனார்கள் மற்றும் நடிகரின் பல்வேறு படங்களில் "கார்வ்", "தேரே நாம்", "தும்கோ நா பூல் பேயங்கே", உள்பட படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர். சல்மான் கானின் படங்களான "வாண்டட்", "தபாங்" மற்றும் "ஏக் தா டைகர்" ஆகிய படங்களில் பணிபுரிந்து உள்ளனர்."மேரா ஹீ ஜல்வா", "ஃபெவிகால் சே" போன்ற படங்களில் சல்மானுக்காகவும், "ரவுடி ரத்தோர்" படத்திலிருந்து "சிந்தா தா சிட்டா சிட்டா" படத்தில் அக்ஷய் குமார் ஆகியோருக்காகவும் வாஜித் பின்னணி பாடி உள்ளார். அவர் சமீபத்தில் சல்மானின் "பியார் கரோனா" மற்றும் "பாய் பாய்" பாடல்களை பாடி உள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago