Skip to main content

போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது...!

Jun 04, 2020 298 views Posted By : YarlSri TV
Image

போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது...! 

பொன் சிவகுமாரனின் நினைவு தினம்

பிரதேச சபையினால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.



போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44 வது ஆண்டு நினைவு தினம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு அனுஸ்டிக்கப்படவுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 



உரும்பிராய் மண்ணின் மைந்தனான பொன் சிவகுமாரன் 1974 ஆம் ஆண்டு யூன் 5 ஆம் திகதி உரும்பிராய் பகுதியில் பொலிசாரின் சுற்றிவளைப்பில் சயனட் அருந்தி மாலை 6.15 மணிக்கு வீரச்சாவடைந்தார். அவரின் திருவுருவச்சிலை உரும்பிராய் சந்தியில் அமையப்பெற்றுள்ளது. 



இச் சிலை வளாகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பொது அஞ்சலிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய கெரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சகலரும் அஞ்சலி செலுத்துமுகமாகவே சனிக்கிழமை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்முறை உரைகள் எதுவும் இடம்பெறமாட்டாது. அதேவேளை உரிய சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள், சமூக இடைவெளியுடன் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே குறித்த அஞ்சலிசெலுத்தல் இடம்பெறும் பகுதியில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தொற்று நீக்கியும் தெளிக்கப்பட்டுள்ளது. கலந்துகொள்பவர்கள் முகக்கவசங்களை அணிந்திருப்பது கட்டாயமானதாகும்.



அகவணக்கத்தினைத்தொடர்ந்து பொது ஈகைச்சுடரினை பொன் சிவகுமாரனின் குடும்பத்தினரும் அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்துதல் என்பன  இடம்பெறும்.    


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை