Skip to main content

போக்குவரத்தில் அறிமுகமாகிறது புதிய சட்டம்....!

May 29, 2020 301 views Posted By : YarlSri TV
Image

போக்குவரத்தில் அறிமுகமாகிறது புதிய சட்டம்....! 

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், சில புதிய விதிமுறைகளையும் சட்டங்களையும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.



குறிப்பாக, போக்குவரத்துப் பேருந்துகளில் பயணங்களினால் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாமையினால் அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது.



பேருந்துகளில் பயணிகளை அதிகளவில் ஏற்றுவது குறித்து அமைச்சரிடம் நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.



இந்நிலையில், பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கமைய மாத்திரம் பயணிகளை அழைத்து செல்வதனை சட்டமாக்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர யோசனை ஒன்றினை சமர்ப்பித்துள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இந்த யோசனை தொடர்பில் கருத்து வெளியிட்ட அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், புதிய சட்டத்தை அமுல்படுத்துவதாயின் பேருந்து கட்டணத்தை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது.



இதேவேளை, ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை அழைத்து செல்லும் சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் பேருந்து துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மாகாண பேருந்து சங்கத்தின் தலைவர் சரத் வீஜிதகுமார குறிப்பிட்டுள்ளார்.



இச்சூழ்நிலையில், பேருந்திற்காக ஏற்படும் செலவினை ஏற்க முடியாத நிலைமை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.



அதேவேளை, அமைச்சர் முன்வைத்திருக்கும் இந்த யோசனையை செயற்படுத்துவதற்கு மாற்று கட்டண முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை