Skip to main content

கொலஸ்ட்ராலை குறைக்கும் மங்குஸ்தான் பழம்

May 31, 2020 324 views Posted By : YarlSri TV
Image

கொலஸ்ட்ராலை குறைக்கும் மங்குஸ்தான் பழம்  

ஸ்ட்ராபெர்ரி சுவையில் இருக்கும் மங்குஸ்தான் பழம் சிறந்த மருத்துவ குணம் கொண்டது. இந்த பழம் உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் மிகவும் அவசியம்.மேலும் தினமும் இந்த பழத்தை உண்டு வந்தால் பல ஆரோக்கியாமான நன்மைகளை பெற முடியும்.கொலஸ்ட்ராலை குறைக்கிறது மங்குஸ்தானில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க பயன்படுகிறது. இது உடலில் உள்ள ட்ரைக்ளிசரைட்ஸின் அளவை சீராக்க உதவுவதுடன் இதயத்தின் சீரான இயக்கத்திற்கும் உதவுகிறது.உடல் எடையை குறைக்க100 கிராம் மங்குஸ்தான் பழத்தில் 63 கலோரிகளே உள்ளது. மேலும் இந்த பழத்தில் மிகக்குறைந்த அளவு கலோரிகள், நிறைவுற்ற கொழுப்புகளும், அதிகளவு நார்ச்சத்துக்களும் உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பழத்தை அதிகம் சாப்பிட வேண்டும்.கர்ப்பிணி பெண்கள் மங்குஸ்தானில் ஆன்டிஆக்சிடண்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகமுள்ளதால் இந்த பழத்தை சாப்பிட்டால் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். கர்ப்ப காலத்தில் இந்த பழம் சாப்பிடுவது பெண்களின் கர்ப்பப்பையை வலுப்படுத்தும்.சீரான இரத்த ஓட்டம் மங்குஸ்தான் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது, இதனால் ஆர்த்ரோகிளோரோசிஸ், உயர் கொழுப்பு, இதய நெரிசல், மார்பு வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கிறது.காசநோய் மங்குஸ்தானில் அதிகளவு ஆன்டிபாக்டீரியால் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படக்கூடிய பண்புகள் உள்ளது. மேலும் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை தடுப்பதில் இது முக்கியப்பங்கு வகிக்கிறது.புற்றுநோய் இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் புற்றுநோய் மற்றும் இதய கோளாறுகளை குணப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. எனவே புற்றுநோயிலிருந்து பாதுகாத்து கொள்ள இதனை தினமும் சாப்பிடுங்கள்.இரத்த அழுத்தம் மங்குஸ்தானில் உள்ள பொட்டாசியம் மாரடைப்பு மற்றும் கரோனரி இதய நோய்கள் போன்றவற்றிக்கு எதிராக செய்லபட உதவுகிறது, இது செல் மற்றும் உடலுக்கு முக்கியமான திரவங்களை சமநிலைப்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.சரும பிரச்சனைகள் இதில் உள்ள இயற்கையான ஆன்டி பாக்டீரியல் மற்றும் நுண்ணுயிர் பொருட்கள் முகப்பருக்கள், தோல் கறைகள், எண்ணெய் சருமம் மற்றும் உலர் சருமம் போன்ற பிரச்சினைகள் சரிசெய்யப்படுகிறது.


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை