Skip to main content

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்

May 30, 2020 487 views Posted By : YarlSri TV
Image

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் 

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகமானது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனின் உற்பத்தி பணிகள் துவங்கி விட்டதாக கூறப்படுகிறது.சமீபத்திய காலாண்டு முடிவு வெளியீட்டின் போது, புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் மாடல்களை தொடர்ந்து பிரீமியம் பிரிவில் வெளியிட இருப்பதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்து இருந்தது.தற்போதைய தகவல்களின்படி புதிய கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஜூன் மாதத்திலேயே அறிமுகமாகும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் கேலக்ஸி இசட் ப்ளிப் மாடலில் வழங்கப்பட்டதை போன்றே மிகமெல்லிய கண்ணாடி பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.முன்னதாக வெளியான காப்புரிமை விவரங்களில் புதிய சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு மாடலின் முன்புறம் நீண்ட டிஸ்ப்ளே நோட்டிஃபிகேஷன்களை காண்பிக்க பொருத்தப்படுவதாக கூறப்பட்டது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் ஐபி தரச்சான்றுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களுடன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், இவை ஜூன் மாத வாக்கிலேயே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Categories: தொழில்நுட்பம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை