Skip to main content

சமுக இடைவெளியை கடை பிடிக்காததால் கொரோனா நோய் தொற்று ஏற்படும் அபாயம்

May 24, 2020 311 views Posted By : YarlSri TV
Image

சமுக இடைவெளியை கடை பிடிக்காததால் கொரோனா நோய் தொற்று ஏற்படும் அபாயம் 

சமூக இடைவெளியை பின்பற்றாமல் அமைச்சர் சி.வி.சண்முகம் நிவாரணம் வழங்கினார். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகாவுக்குட்பட்ட கிராம பகுதிகளான செவலபுரை. வடபாலை, மேல்மலையனூர் ஆகிய பகுதிகளில் அதிமுக சார்பில் நேற்று காலை கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது. இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்  கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.



அப்போது செவலபுரை, வடபாலை ஆகிய கிராமங்களில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டமாக நின்று நிவாரண பொருட்களை வாங்க முண்டியடித்து கொண்டு சென்றனர். சமுக இடைவெளியை பின்பற்றாமல் போட்டி போட்டுக் கொண்டு நிவாரண பொருட்களை வாங்கியவர்களை  போலீசார் கலைக்க முயன்றும் மக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். சமூக இடைவெளியை பின்பற்றாமல் நிவாரண பொருட்களை அமைச்சர் வழங்கியதால் கொரோனா நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை