Skip to main content

கொரோனா நோயாளிகளுக்கு மனநல பிரச்சனை ஏற்படும்

May 20, 2020 329 views Posted By : YarlSri TV
Image

கொரோனா நோயாளிகளுக்கு மனநல பிரச்சனை ஏற்படும் 

கொரோனா நோயாளிகளுக்கு மனநல பிரச்சனை ஏற்படும் என்று லண்டன் பலகலைகழக ஆய்வாளர்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து அவர்கள் ‘தி லான்செட் சைக்கியாட்ரி’ இதழில் வெளியிட்ட செய்தியில், கொரோனா நோயாளிகளில் நான்கில் ஒருவர், மனப் பிரமை பிரச்சனைக்கு ஆளாகிறார். இது வழக்கமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஏற்படுவதுதான். எனினும் இந்த பிரச்சனை ஒருவரின் உயிரைப் பறிக்க அல்லது குணமடைவதை தாமதிக்க காரணமாக இருக்கிறது.



கொரோனா சிகிச்சைக்குப் பின் குணமடைந்தோர், தீவிர மன அழுத்தம், மன உளைச்சல், பதற்றம் ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் இருக்கலாம். அதே நேரத்தில், மனப் பிரமை, குழப்பம், ஞாபக மறதி பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.



கொரோனா நோயாளிகள் தனிமையில் வைக்கப்படுகின்றனர். அதுதான், அவர்களின் மனநல பாதிப்பிற்கு காரணமாக அமைகிறது. அதனால் அவர்கள், ‘வீடியோ’ மூலம் தங்கள் சுற்றத்தாரை காணவும், பேசவும் வசதி செய்தால், மன நலம் மேம்படும் சாத்தியக் கூறு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை