Skip to main content

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காக கூடுதல் இடங்களில் ரயில்களை நிறுத்த உத்தரவு

May 20, 2020 297 views Posted By : YarlSri TV
Image

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காக கூடுதல் இடங்களில் ரயில்களை நிறுத்த உத்தரவு  

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களை கூடுதல் இடங்களில் நிறுத்தலாம் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு  மாநிலங்களில் சிக்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த மாநிலம் செல்வதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக  நிலையான நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வகுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறை  குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று கூறியதாவது:



* புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் செல்ல சிறப்பு ரயில்களுக்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திய பிறகே ரயில்வே அமைச்சகம் வழங்க வேண்டும்.

* மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப, ரயில்கள் கால அட்டவணை, ரயில் நிறுத்தம் மற்றும் சென்றடையும் இடத்தை ரயில்வே முடிவு செய்ய வேண்டும்.

* சிறப்பு ரயில்களில் பயணம் செய்யும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காக கூடுதல் இடங்களில் ரயில்களை நிறுத்தலாம்.

*  பயணத்துக்கு முன்பாக பயணிகளை மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதை மாநில அரசுகளும், ரயில்வேயும் உறுதி செய்ய வேண்டும்.

* ரயில் பயணத்தின்போது அனைத்து பயணிகளும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

* புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்கு, தேவையான எண்ணிக்கையில் கூடுதல் பஸ்களை இயக்கலாம்.என தெரிவித்துள்ளனர் 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை