Skip to main content

உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாக உள்ளது என அமெரிக்க மீண்டும் குற்ற சாட்டு

May 19, 2020 322 views Posted By : YarlSri TV
Image

உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாக உள்ளது என அமெரிக்க மீண்டும் குற்ற சாட்டு 

அமெரிக்க  ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார அமைப்பை சீனவின் "கைப்பாவை" என்று குற்றம்சாட்டினார். மேலும் அதற்கான அமெரிக்க ஆதரவை குறைப்பது அல்லது ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக கூறினார்



வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியதாவது:- 



 



உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவை, அவர்கள்  சீனாவை மையமாகக் கொண்டவர்கள்.உலக சுகாதார அமைப்பு எங்களுக்கு நிறைய மோசமான ஆலோசனைகளை வழங்கினார்கள்



 



எந்தவொரு நாடும் வழங்காத நிதியை உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 450 மில்லியன் டாலர் வழங்கி வருகிறது. ஆனால் நாங்கள் சரியாக நடத்தப்படவில்லை  இதனால் நிதியை குறைக்க நாங்கள் திட்டங்களை வடிவமைத்து உள்ளோம்.



 



சீனா ஆண்டுக்கு சுமார் 40 மில்லியன் மட்டுமே செலுத்துகிறது. எங்கள் 450 ஐ 40 ஆகக் குறைப்பது ஒரு யோசனை சிலர் அதை  பெரிதாக நினைக்கிறார்கள் என கூறினார். 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை